• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை மற்றும் 28 ஆயிரம் ரூபாய் கொள்ளை..,

ByKalamegam Viswanathan

Sep 10, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சங்கர் நகர் 8வது தெரு பகுதியில் பாபு- சுதா தம்பதியரின் பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 28 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பாபு – சுதா தம்பதியர் அருகாமையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு இரவு நேரங்களில் சென்று தங்குவதை அறிந்த கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை நிறைவேற்றியுள்ளனர் .

     இதனை தொடர்ந்து, அருகாமையில் உள்ள வீடுகளில் கொள்ளையடிக்க  மூன்று தொப்பி அணிந்த திருடர்கள் நோட்டமிடும் காட்சி சிசிடிவி வீடியோவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.