• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

லாரி மீது பின்புறமாக ஆட்டோ மோதி விபத்து- 2 குழந்தைகள் உட்பட 5 பேர்காயம்

ByKalamegam Viswanathan

May 20, 2023

ராஜபாளையம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்புறமாக ஆட்டோ மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஜபாளையம் அருகே மேல வரகுண ராமபுரத்தை சேர்ந்த வனிதா தன்னுடைய மகன் 2 வயது ராகுல் உடனும், உறவினரான புத்தூரை சேர்ந்த தங்கமாடத்தி ஒன்னரை வயது குழந்தை சொர்ண தர்ஷன் உடனும் ராஜபாளையம் சென்றுள்ளார்.
பின்னர் நால்வரும் பேருந்து மூலம் தளவாய் புரத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். ஆட்டோவை புத்தூரை சேர்ந்த தங்கப்பிரகாஷ் ஓட்டி சென்றுள்ளார்.

இவர்களது வாகனம் புனல் வேலி கண்மாய் பாலம் அருகே வேகமாக சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வேன் மீது பின் பக்கமாக மோதி உள்ளது.இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த குழந்தைகள் உட்பட ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில் வனிதா, தங்கமாடத்தி, கைக் குழந்தையான ராகுல் ஆகியோர் சிறிய காயங்களுடன் தப்பிய நிலையில் ஆட்டோ ஓட்டுனர் தங்கப்பிரகாஷ் மற்றும் ஒன்றரை வயதான சொர்ண தர்ஷன் ஆகியோர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து தளவாய்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.