• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

‘நம்மைக் காக்கும் 48’ – தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Byமதி

Dec 18, 2021

சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில், ‘நம்மை காக்கும் 48’ சிகிச்சைத் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தின் மூலம், பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 81 வகையான தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறை செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்காக, சாலையோரங்களில் உள்ள தனியார், அரசுத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று மொத்தம் 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடுத்த 12 மாத காலத்துக்குச் செயல்படுத்தப்படும். பின்னர் வருடாந்தர செலவுகளை மதிப்பாய்வு செய்து, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அதற்காக 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை மேல்மருவத்தூரில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.