• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே 45 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி

ByKalamegam Viswanathan

Oct 1, 2024

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள் புறம் கிராமத்தில் ஸ்போர்ட்ஸ் கிளப் இரண்டாம் ஆண்டு கபடி குழு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து நடத்திய கபடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை தேனி திண்டுக்கல் திருச்சி திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 45 அணிகள் பங்கு பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு மன்னாடிமங்கலம் தெற்கு கிளை அதிமுக செயலாளர் ராஜபாண்டி பரிசு தொகை 10,000 மற்றும் கோப்பை வழங்கினார். மேலும், இரண்டாம் மூன்றாம் பரிசு பெற்ற அணியினருக்கு பரிசுத்தொகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கு பெற்ற வீரர்கள் அனைவருக்கும் உணவு இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நன்கொடையாளர்கள் செய்து கொடுத்தனர்.