• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர்!

உக்ரைனின் போரிட்டு வரும் ரஷ்ய வீரர்கள் 4,300 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தகவல்.

உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக இடைவிடாத தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரஷ்ய வீரர்கள் 4,300 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ஹன்னா மலயார் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் 146 டாங்கிகள் (பீரங்கிகள்), 27 போர் விமானங்கள் மற்றும் 26 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் உக்ரைன் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது போர் தொடங்கிய 4 நாட்களிலேயே ரஷ்யாவிற்கு இது மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் உக்ரைன் ராணுவனத்தை பொறுத்தவரை 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே இறந்துள்ளார்கள் என்று இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் , ரஷ்ய ராணுவம், உக்ரைன் நாட்டின் வீரர்கள் எத்தனை பேரை கொன்றுள்ளார்கள் என்று முழுமையான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..