• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

போஸ்ட் ஆபீஸில் 40,899 பணியிடங்கள்! தேர்வு கிடையாது..

ByA.Tamilselvan

Feb 4, 2023

இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் உதவியாளர் பதவியில் உள்ள 40,899 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலிப்பணியிடங்கள் இடம் பெற்றுள்ளது.
பணி: Gramin Dak Servaks – கிராமின் தாக் சேவக்
மொத்த காலியிடங்கள்: 40,899 பணியிடங்கள்
தமிழ்நாடு – 3,167 பணியிடங்கள் கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணபிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: விண்ணப்பத்தாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விகிதங்களின்படி தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in / https://indiapostgdsonline.gov.in -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள், மகளிர், Transwomen ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
எப்படி விண்ணப்பிப்பது? இதற்கு விண்ணப்பிப்பதற்கு அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கமான appost.in ற்கு சென்று அதில் கிடைக்கும் வழிகாட்டுதலை பின்பற்றினாலே போதும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று படி நிலைகள்,ரிஜிஸ்ட்ரேஷன் (பதிவு செய்தல்): முதலில் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பதிவு செய்து தனிப்பட்ட பதிவு எண்ணைப் (Unique Registration Number) பெற வேண்டும். கட்டணம் செலுத்துதல் UR/OBC/EWS ஆகியவற்றில் ஆண்கள்/திருநம்பிகள் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தொகையை எடுத்துக்கொண்ட பின் எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் பதிலுக்காக 72 மணிநேரம் வரை காத்திருக்கலாம். எல்லா தலைமை தபால் அலுவலகத்திலும் நேரடியாக பணம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தை நிரப்பவும். பின் ஆவணங்களைப் பதிவேற்றவும். பின்னர் அஞ்சல் அலுவலக விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும். உங்கள் விண்ணப்பத்தை சரி பார்த்து விட்டு, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும். இந்த மூன்று படிகளை முடித்தால், விண்ணப்பம் சமர்பிக்க பட்டுவிடும். இந்த லிங்க்கில் சென்று விண்ணப்பிக்கவும் https://www.appost.in/gdsonline/home.aspx.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.02.2023
முழு அறிவிப்பிற்காக லிங்க- https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf
மணடலங்கள் முறையே உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களுக்கு.. https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Final_Post_Consolidation.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.