• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

40 லட்சம் ஆண்டுகள் பழமையான நெபுலா – புகைப்படம் வெளியிட்ட நாசா

ByA.Tamilselvan

Oct 11, 2022

விண்வெளியில் 40 லட்சம் ஆண்டுகள் பழமையான விண்மீன்களின் திரள் கொண்ட நெபுலாவின் புகைப்படத்தை அமெரிக்கவிண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
விண்ணில் ஏராளமான அதிசயங்களும், மர்மங்களும் உள்ளன. அந்த மர்மங்களை கண்டறிய உலக நாடுகள் பல செயற்கை கோள்களையும், தொலை நோக்கிகளையும் அனுப்பி அரிய தகவல்களை பெற்று வருகின்றன. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி ஹப்பின் தொலை நோக்கியை விண்ணில் நிலை நிறுத்தியது. இந்த அதிநவீன தொலைநோக்கி பல அரிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. தற்போது பூமியில் இருந்து 7100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பபுள் நெபுலாவை, நாசாவின் ஹப்பின் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. விண்மீன்கள் கூட்டத்துக்குள் உள்ள அந்த ‘பபுள் நெபுலா’ கண் கவரும் வகையில் மிகவும் வண்ணமயமாக காணப்படுகிறது.
நெபுலாக்கள் என்பது விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள், தூசி மற்றும் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களால் உருவாகும் பெரிய மேகத்தை குறிக்கும். இது 40 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.