• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…

Byகாயத்ரி

Sep 28, 2022

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 2022 முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், டெல்லி, மும்பை, அகமதாபாத் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். PMGKAY (இலவச ரேஷன்) திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது எனவும் கூறினார்.