• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சதுரகிரிக்கு செல்ல நாளை முதல் 4 நாள் அனுமதி

ByA.Tamilselvan

Feb 2, 2023

தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் யாரும் நீரோடை பகுதியில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை. கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பக்தர்கள் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.