• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை

ByA.Tamilselvan

Jul 23, 2022

இந்தியாவில் 4 கோடி பேர் ஒருடோஸ் தடுப்பூசி கூட போடவில்லை என காதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தீவிரமடைந்ததை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு தடுப்பூசி மையங்களை ஏற்பாடு செய்தன. அரசு தடுப்பூசி மையங்களில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை மருந்துகளை வழங்குவதற்கான சிறப்பு 75 நாள் மையம் கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில், ஜூலை 18-ம் தேதி நிலவரப்படி தகுதியான 4 கோடி பயனாளிகள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்திக்கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளதவர்களின் எண்ணிக்கை மற்றும் சதவீதம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். .