• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 3வது புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி.., அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைப்பு…

ByG.Suresh

Jan 27, 2024

சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 3வது புத்தக திருவிழா மற்றும் கண்காட்சியின் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் துவக்கி வைத்தார். புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்ட 120 ஸ்டால்களில் இலக்கியம், கட்டுரை, போட்டி தேர்வு, மருத்துவம், இன்ஜினியரிங், கல்விக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மாலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, கவிஞர், தமிழறிஞர்கள், பட்டி மன்றம்,நடுவர்களின் சொற்பொழிவு நடைபெறுகிறது. மேலும் கீழடியின் வரலாறு, செய்தித்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப் பட கண்காட்சி, அறிவியல் சார்ந்த பொருட்களின் கண்காட்சி, போக்குவரத்து துறை சார்பில் சாலை விழிப்புணர்வு வாகன கண்காட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது. தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும் அறிவு களஞ்சியத்தை புத்தக வடிவில் அள்ளிச்செல்ல பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.