• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அசாமில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்

Byவிஷா

Apr 18, 2024

அசாமில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள். ஒரே குடும்பத்தில் இத்தனை பேரா என அதிகாரிகள் ஆடிப் போய் உள்ளனர்.
அசாம், புலோகோரிநேபாளி பாம் பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் ரான் பகதூர் தாப்பா என்பவர் குடும்பத்தில் மட்டும் 350 வாக்காளர்கள் உள்ளனர். இவருக்கு 5 மனைவிகள்.
அவர்கள் உயிரோடு இல்லாத நிலையில், 12 மகன்கள் 9 மகள்கள் 150 பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதுகுறித்து பேசிய ரான் தாப்பாவின் மகன் தில் பகதூர், எனது தந்தையின் தந்தை 1964-ம் ஆண்டு அசாமில் வந்து குடியேறினார்.
எனது தந்தைக்கு 5 மனைவிகள். அவர்களில் ஒருவரும் உயிரோடு இல்லாத நிலையில் தற்போது எங்களுடன் இணைந்து வசித்து வருகிறார். தேர்தலில் எனது குடும்பத்தை சேர்ந்த 350 பேர் வாக்களிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் சோனித்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள். அங்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.