குமரி மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளரக
டாக்டர்.ஸ்டாலின் பதவி ஏற்றப்பின். குமரி மாவட்டத்தில் காவல்துறையின் நடவடிக்கை வேகமான ஒரு சட்ட ஒழுங்கு பாய்ச்சலில் பாய்ந்து வருகிறது. பொது மக்களுக்கும் காவல்துறை மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேசமணி நகர் பகுதியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்த விற்பனையாளர்கள் பற்றிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.
அதன்படி, இரணியல் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் 31.5 கிலோ கஞ்சாவும், ஒரு கார் மற்றும் ஒரு லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன. தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.