• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே 30பவுன் நகை மீட்பு..,

ByS.Ariyanayagam

Jul 9, 2026

திண்டுக்கல் அருகே அம்புளிக்கை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது – 24 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அடுத்த அம்பிளிக்கை அருகே குத்திலிப்பை, குருவோணம் பள்ளம் பகுதியை சேர்ந்த செல்வி(54), என்பவரின் வீட்டின் பூட்டை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மர்ம நபர்கள் உடைத்து 30 பவுன் தங்க நகை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக அம்பிளிக்கை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சம்பவத்தில் ஈடுபட்ட நபர் செங்குறிச்சி, ஆலம்பட்டியை சேர்ந்த சக்திவேல்(28) என தெரிய வந்தது. ஆனால் மற்றொரு திருட்டு வழக்கில் சக்திவேல் கோயம்புத்தூர் மத்திய சிறையில் இருந்தார். இதனை தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் சக்திவேலை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு 24 பவுன் தங்க நகையை மீட்டு ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.