மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் மண்டு கோவில் தெருவில் வசிப்பவர் ராஜ்குமார் நீலம்மாள் தம்பதியரின் மகனான கருண்ராஜ் என்ற மூன்று வயது சிறுவனை வெறிநாய் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த காரணராஜ் மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்குள் இருந்த கரன்ராஜை தெருவில் திரிந்த வெறிநாய் வீட்டிற்குள் புகுந்து கரன்ராஜின் கண் மூக்கு பகுதிகளில் கடித்துக் குதறி இருப்பதாக தெரிகிறது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்து சிறுவனை மீட்டு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
இதனை தொடர்ந்து தெருவில் ஓடிய வெறிநாய் அருகில் காளியம்மன் கோவில் தெரு பகுதியில் ஒருவரை கடித்து குதறியதாக தெரிகிறது. அவரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக பதட்டம் அடைந்த சிறு குழந்தைகளை வைத்திருக்கும். பெற்றோர்கள் வீட்டிற்குள் தொட்டிலில் குழந்தைகளை போட்டுவிட்டு கதவை பூட்டி வெளியில் காவல் காத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில் வெறிநாய் இன்னும் ஊருக்குள் சுற்றித் திரிகிறது உடனடியாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இது போன்ற வெறி நாய்களை கண்டுபிடித்து அப்புறப்படுத்த வேண்டும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களை வெறிநாய்க்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். சிறுவனின் தந்தை டிரைவர் வேலை பார்ப்பதாகவும் தாயார் கூலி வேலை பார்ப்பதாகவும் கூறப்படும் நிலையில் வெறிநாய் கடித்து மூன்று வயது சிறுவன் உள்பட இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.