• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சூடானில் 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிப்பு

ByA.Tamilselvan

Apr 19, 2023

ராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது.இம்மோதல் உள்நாட்டுப்போராக மாறியுள்ளநிலையில் இந்தியர்கள் சிக்கி உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் நாட்டின் அதிகாரத்தை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம், துணை ராணுவ படைகள் இடையே மோதல் வெடித்தது. வான்வெளி தாக்குதலும் நடத்தப்பட்டது. சூடானில் ராணுவத்தினர் இடையேயான மோதலில் பொது மக்கள் பலியானார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் உள்நாட்டு சண்டையால் சூடானில் 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசும், சூடான் தூதரக அதிகாரிகளும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளுடன் மீட்பு பணிகள் பற்றி தூதரக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.