மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக சாலை பாதுகாப்புகள் குறித்து மூன்று நாட்கள் சிறப்பு செய்முறை வகுப்புகள் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆறாம் அணியின் காமாண்டென்ட். மதுக்குமாரி IPS அவர்களது உத்தரவின் படி.. துணை கமாண்டென்ட் தாமஸ் அவர்களது மேற்பார்வையில்.. உதவி கமாண்டென்ட்.. மான் சிங் அவர்களது முன்னிலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6 ம் அணியினை சார்ந்த காவல்துறையினருக்கு சாலை பாதுகாப்பு குறித்து 09.02.26 திங்கள் முதல் 11.02.26 புதன் வரை மூன்று நாட்கள் சிறப்பு வகுப்புகள், செய்முறை விளக்கங்கள் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது..

இதில் சாலை பாதுகாப்புகள் குறித்தும், போக்குவரத்து விழிப்புணர்வு குறித்தும், விபத்தில்லாத பயணம் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும்.. சாலை பாதுகாப்பில் காவலர்களின் பங்கு என்ன என்பது குறித்தும் பல்வேறு செயல்முறை விளக்கங்களுடன் மூன்று நாட்கள் சிறப்பு வகுப்பினை மதுரை மாநகர்,திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் எடுத்துரைத்தார்.. மூன்று நாள் வகுப்பின் இறுதியில் அனைத்து காவலர்களும், காவல் துறை அதிகாரிகளும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி மேற்கொண்டனர்.. தா.சி.கா 6 ஆம் அணியின் சார்பாக 300 காவலர்களும் 50 காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.











