திண்டுக்கல்லில் பிரபல நகை கடையில் ரூ.1 கோடியே 43 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் திருடிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாநகராட்சி அருகே உள்ள பிரபல நகைக்கடையில் தணிக்கை செய்தபோது கடையில் பணிபுரிந்த சிவா, கார்த்திகேயன், விநாயகன், பாண்டியன், கார்த்திக், சரவணகுமார், செல்வராஜ் ஆகிய 7 பேரும் கூட்டு சேர்ந்து கடையிலிருந்து ரூ.1 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 10 கிராம் எடையுள்ள நகைகளை திருடியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் அவர்களிடம் புகார் அளித்ததன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிவா, கார்த்திகேயன், விநாயகர் ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.




