• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற 3 பேர் கைது.!!

ByKalamegam Viswanathan

May 29, 2023

மதுரையில் காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற இளம்பெண்ணின் குடும்பத்தினர்- 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சரவணகுமார்.இவரது மகன் காந்திராஜன் (வயது 28). வேன் டிரைவரான இவர் மதுரை ஜீவாநகரில் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மதுரை தெற்குவாசல் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காந்தி ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப் பதிந்தனர். கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது
அந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் காந்தி ராஜன் காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டதும், அவர் காதலித்து வந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரே அவரை தீர்த்து கட்டிய அதிர்ச்சி தகவலும் வெளியானது. மதுரை கீரைத்துறையை சேர்ந்த மாயழகு என்பவரின் மகளை காந்திராஜன் காதலித்து வந்தள்ளார். இதற்கு மாயழகுவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருந்த போதிலும் அந்த இளம் பெண்ணுடன் காந்திராஜன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாயழகின் மகன் காளிதாஸ் (21), 17 வயது சிறுவனான மற்றொரு மகன் ஆகிய இருவரும் காந்திராஜனை வெட்டி கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காந்தி ராஜன் கொலை கொலை தொடர்பாக மாயழகு மற்றும் அவரது 2 மகன்களையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் இன்று போலீசாரிடம் சிக்கினர். கொலைக்கான காரணம் குறித்து 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..