• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஸ்காட்லாந்தில் நடந்த விபத்தில் ஆந்திர மாணவர்கள் 3 பேர் பலி

ByA.Tamilselvan

Aug 25, 2022

ஸ்காட்லாந்தில் நடந்த கார் விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 3மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி
ஆந்திரா மாநிலம், பலமனேரை சேர்ந்தவர் கிரிஷ் குமார் (வயது 23). ஐதராபாத்தை சேர்ந்த பவன் (22), நெல்லூர் சுதாகர் (30), சிலக்க மல்லி சாய் வர்மா ஆகியோர் லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். நண்பர்களான 4 பேரும் நேற்று முன்தினம் லண்டனிலிருந்து ஸ்காட்லாந்துக்கு காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் இருந்த கிரிஷ் குமார், பவன், சுதாகர் ஆகியோர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த சாய் வர்மாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த 3 பேரின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.