திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா முதல்வர் சுப.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை காமராசர் பல்கலைக் கழக பதிவாளர் முனைவர்.பேராசிரியர் ம.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு 200 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதலிடம் பெற்ற 5 மாணவிகள் தங்க பதக்கம் பெற்றனர். கணிதவியல் துறை சார்ந்த மாணவி பிரசாந்தி இரண்டு பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற்றிருந்தார். அவருக்கும் தங்க பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார். இவ்விழாவில் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவினை வணிகவியல் துறைத்தலைவர் முனைவர்.கு சரவணக்கைலாஸ் மற்றும் துறை பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
