• Wed. Jan 22nd, 2025

அனைத்து ரயில்களிலும் 25சதவீதம் கட்டண குறைப்பு..!

Byவிஷா

Jul 8, 2023

வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் குளிர்சாதன பெட்டிகளின் இருக்கை கட்டணம் 25சதவீதம் குறைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனைத்து ரயில்களின் ஏசி நாற்காலி வகுப்பு மற்றும் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் கட்டணத்தில் இந்த விலக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் உத்தரவில், வந்தே பாரத் அரை அதிவேக ரயிலின் கட்டணத்தை குறைப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
ரயில்வே வாரியம் பிறப்பித்த அந்த உத்தரவில், கடந்த 30 நாட்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான இருக்கைகளே நிரம்பிய ரயில்வே மண்டலங்களில் இருந்து ரயில்களில் சலுகைக் கட்டணத் திட்டத்தைத் தொடங்கவும் கோரப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் சில வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் காலியாக உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் ரயில்வே வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒப்பீட்டளவில் குறுகிய வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் முழுமையாக நிரப்பப்படவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.