• Wed. Dec 11th, 2024

24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல.. கமிஷனர் அலுவலகத்தில் கூச்சலிட்ட மீரா மிதுன்!…

By

Aug 15, 2021
Meera mithun

பட்டியலின மக்களையும், அதைச் சார்ந்த சினிமா இயக்குநர்களையும் தரக்குறைவாக பேசி சோசியல் மீடியாவில் வீடியோ பதிவிட்டது தொடர்பாக மீரா மிதுன் மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணைக்கு சம்மன் அனுப்பியும், மீரா மிதுன் ஆஜராகாமல் தலைமறைவானார்.

அத்தோடு நில்லாமல் என்னை கைது செய்வது கனவிலும் நடக்காது என சவால் விட்டு காவல்துறையினரை கடுப்பேற்றினார். இந்நிலையில் தான் நேற்று கேரள மாநிலம் ஆழாப்புலாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பதுங்கியிருந்த மீரா மிதுனை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அப்போது கூட மீரா மிதுன் போலீசாரை தரக்குறைவாக பேசி வாக்குவாத்தில் ஈடுபட்டார். தனக்கு எதிராக காவல்துறையினர் அராஜகமாக செயல்படுவதாக வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுன், போலீஸ் வாகனம் மூலமாக தற்பொழுது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

அப்போதும் போலீசார் தொடர்ந்து தன்னை துன்புறுத்தி வருவதாகவும், கடந்த 24 மணி நேரமாக தனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை என்றும் கமிஷனர் அலுவலகம் என்றும் பாராமல் கூச்சலிட்டார். தான் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், தன்னை மட்டும் உடனே கைது விட்டதாகவும், என் கையை உடைக்க காவல்துறையினர் முயற்சிக்கின்றனர் என்றும் கூச்சலிட்டபடியே சென்றார்.