• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இஸ்ரேலில் இருந்து 2ம் கட்டமாக 235 இந்தியர்கள் தமிழகம் வருகை..!

Byவிஷா

Oct 14, 2023

இஸ்ரேலில் இருந்து 2ம் கட்டமாக 235 இந்தியர்கள் விமானம் மூலமாக தமிழகம் வந்தடைந்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் பல இந்தியர்கள் இந்த போரால் சிக்கிக்கொண்டனர். மத்திய அரசு அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. மத்திய அரசு இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி அதன்படி, முதல்கட்டமாக இஸ்ரேலிலிருந்து 212 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டு அவர்கள் நேற்று காலை டில்லி வந்தடைந்தனர்.
ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலிலிருந்து மேலும் 235 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த 235 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2வது மீட்பு விமானம் இஸ்ரேலிலிருந்து கிளம்பி இன்று காலை டில்லி வந்தடைந்தது. டில்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி ராஜ்குமார் ராஜன்சிங் நேரில் சென்று வரவேற்றார். இவரை இஸ்ரேலிலிருந்து 447 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.