• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் செயல்படாதவை: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

ByA.Tamilselvan

Nov 5, 2022

இந்திய தேர்தல் கமிஷன் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பற்றிய தகவல்களை திரட்டியது. அதில், தேர்தலில் பங்கேற்காத கட்சிகள், கணக்குகளை உரிய வகையில் காட்டாத கட்சிகள் ஆகியவற்றின் பெயரை மாநில வாரியாக தேர்தல் கமிஷன் பட்டியலிட்டு வெளியிட்டது. இதில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 233 கட்சிகளில் செயல்பாடில்லாத பல கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், வருமான வரி உள்ளிட்ட கணக்குகளையும் காட்டாமல், கமிஷனிடம் அளித்த முகவரியில் செயல்படாமல், தொடர்பு கடிதங்கள் திரும்பி வந்த நிலையில் உள்ள 22 கட்சிகளை செயல்படாத கட்சிகளாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அந்தக் கட்சிகளின் பெயர் பட்டியல் தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.