• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பன்னியான் கிராமத்தில்உரிய விலை இல்லாததால் 200 ஏக்கர் தக்காளி வயலில் அழுகி நாசம்..

ByKalamegam Viswanathan

Mar 21, 2025

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே நாகமலை அடிவாரத்தில் உள்ளது. பன்னியான் கிராமம் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ள இந்த கிராமத்தில் தக்காளி கத்திரிக்காய் வெண்டைக்காய் போன்ற விவசாயம் அதிகம் விளையும் பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் தற்போது 200 ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் அதிக மகசூல் காரணமாகவும் போதிய விலை இல்லாத நிலை காரணமாகவும் வயல்களிலே தற்காளிகளை அழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் தக்காளி நிலத்திற்குள் கால்நடைகளை மேய விட்டு தக்காளி செடிகளை அழிக்கும் பரிதாப நிலைக்கு இந்த பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி வெறும் 40 ரூபாய்க்கு விலை போவதால் மிகுந்த நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

ஏக்கருக்கு 70,000 முதல் 80,000 செலவு செய்திருந்த நிலையில் 5 ஏக்கர் தக்காளி விவசாயம் செய்துள்ள பண்ணியான் கிராமத்தைச் சேர்ந்த சிங் என்ற விவசாயி தனக்கு மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி எடுப்பதற்கு 80 ரூபாய் செலவு செய்யும் நிலையில் ஒரு பெட்டியின் விலை வெறும் ₹40-க்கு விற்பதால் தக்காளி விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகுந்த கேள்விக்குறியாகி உள்ளது வேதனை தருவதாக கூறுகின்றனர்.

ஆகையால் அதிகாரிகள் தக்காளி விவசாய பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒரு சில விவசாயிகள் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை முடிவுக்கும் தள்ளப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஆகியால் அரசு உடனடியாக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள தக்காளி விவசாயிகளை காப்பதற்கும் தொடர்ந்து அவர்கள் விவசாயம் செய்வதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.