திண்டுக்கல்லில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர் திண்டுக்கல், சிட்கோ தொழில்பேட்டையில் கடந்த மாதம் முத்துப்பாண்டி என்பவருக்கு சொந்தமான லேத் ஒர்க் ஷாப்பின் சட்டர் கதவின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாவில் வைத்திருந்த ரூ.12,500 பணம் மற்றும் அருகே சித்தார்த் என்பவருக்கு சொந்தமான மெட்டல் கம்பெனியின் கதவின் பூட்டை உடைத்து கல்லாவில் வைத்திருந்த ரூ.15,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சரத்குமார், பிரபாகரன் மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த கார்த்திக் (25), வடமதுரை சேர்ந்த பாண்டியராஜ்(28) ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.










