• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திருட்டு மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய 2 திருடர்கள் மின்சாரம் தாக்கி பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு திருட்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய இரண்டு திருடர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலி. சம்பவ இடத்தில் இருந்து உடலை மீட்ட வடசேரி போலீசார், உயிரிழப்பு குறித்து விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் WCC சாலையில் மீட் தெரு வில் பயன்பாட்டில் இல்லாமல் நீண்ட காலமாக பூட்டிய நிலையில் கட்டிடம் ஒன்று உள்ளது. அக்கட்டிட வளாகத்தினுள் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்து கிடப்பதாக வடசேரி போலீசாருக்கு அப்பகுதியினரால் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பல்வேறு திருட்டு மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய கருங்கல் பகுதியை சேர்ந்த ஜாண் போஸ்கோ (33), பாறைக்கால்மடம் பகுதியை சேர்ந்த ராபர்ட்(20) இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் அங்கு கட்டிங்பிளேயர் மூலம் ஒயர்களை வெட்டியுளதும், அதேப்போன்று அப்பகுதியில் உள்ள மின்கம்ப நிலைநிறுத்தும் கம்பியையும் வெட்டி எடுக்க முயற்சித்துள்ளனர். அதில் ஏற்கனவே செடிகொடிகள் படந்து காணப்பட்டதால் அதில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனால் இருவரும் சம்பவ இடத்தில் மின் கம்பி உடலில் சுற்றிய நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இருவரது உடலையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.