வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பகுதியில் அனுமதி இன்றி மதுவிற்ற 2 பேரை கைது செய்து 134 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஏரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலையரசி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரோஜர் மில்டன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது எரியோட்டில் அய்யலூர் சாலையில் அனுமதி இன்றி திருட்டுத்தனமாக மதுவிற்ற மத்தனம்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன் (வயது 35) என்பவரை பிடித்து அவர் வைத்திருந்த 84 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல புங்கம்பாடியில் அனுமதி இன்றி திருட்டுத்தனமாக மாறிவிட்ட வடுகம்பாடியை சேர்ந்த பாலமுனியப்பன் (வயது 30) என்பவரை கைது செய்து அவர் வைத்திருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட இருவரையும் கைது செய்து 134 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



