• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பத்திரிகையாளர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

ByA.Tamilselvan

Aug 29, 2022

கொலம்பியாவில் பத்திரிகையாளர்கள் 2பேர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலம்பியா நாட்டின் கரீபியன் கடலோர பகுதியில் உள்ள வடக்கு நகரான பண்டேசியன் நகரில் ‘சொல் டிஜிட்டர்’ என்ற பெயரில் இணையதள செய்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் லீனர் மோண்டிரோ ஆர்டிகா (வயது37), தலியா கான்ட் ரிராஸ் கேண்டில்லோ (39) ஆகிய இருவரும் செய்தியாளர்களாக பணியாற்றி வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் திருவிழா ஒன்றை படம் பிடிக்க சென்றனர். சான்டா ரோசா டிலிமா பகுதியில் நடந்த திருவிழாவை படம்பிடித்து, செய்தி சேகரித்துக் கொண்டு அலுவலகத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.