• Sat. Jan 31st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள்

Byவிஷா

Feb 14, 2024

ஸ்பெயினில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த இஷா அனில் தக்சலேஇ ஆடவருக்கான போட்டியில் உமாமகேஷ்மதீனன் இருவரும் தங்கப்பதக்கங்கள் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஸ்பெயினில் உள்ள கிரனடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இஷா அனில் தக்சலே இறுதி சுற்றில் 251.8 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷாம்பவி ஷிர்சாகர் 227.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா 3 பதக்கங்களையும் முழுமையாக கைப்பற்றியது. உமாமகேஷ் மதீனன் இறுதி சுற்றில் 252.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்களான பார்த் மானே 250.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும்இ அஜய் மாலிக் 229 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.