மதுரை கப்பலூர் தொழில் பேட்டையில் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த பாண்டி செல்வம் இவரது ஒரே மகள் பார்க்கவி (வயது2 1/2 )
பாண்டி செல்வம் வனிதா ஆகிய இருவரும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக வனிதா தனியாக தாயார் வீட்டில் இருந்துள்ளார்.

கடந்த 10 நாட்கள் முன்பு பகலில குழந்தை தகப்பனிடமும் இரவில் தாயிடமும் இருப்பதால் அடிக்கடி குடும்ப சட்டை வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஃபோனில் கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டதால் ஆத்திரம் அடைந்த பாண்டி செல்வம் குழந்தை அடித்து தள்ளிவிட்டு இருக்கிறான். 2 1/2 வயது குழந்தை பார்கவி உயிரிழந்தது.
இதை அறிந்த பாண்டி செல்வம் குழந்தையை சாக்கில் கட்டி தான் வேலை செய்யும் கம்பெனியின் பின்புறம் வைத்ததால் பிறகு திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் குழந்தை காணவில்லை என்று புகார் செய்துள்ளார்.

இன்று காலை வேலைக்கு வந்தவர்கள் பார்த்து துர்நாற்றம் வீசுகிறது என்று தகவல் கொடுத்ததன் அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீசார் காவல் ஆய்வாளர் சரவணகுமார் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பத்தில் பாண்டி செல்வத்தை கைது செய்து மேற்படி விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை கொலை சம்பவம் குறித்து மதுரை கப்பலூர் தொழில் பேட்டையில் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.