• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளியில் மரம் முறிந்து விழுந்து விபத்து.., 17 மாணவர்கள் படுகாயம்…

ByKalamegam Viswanathan

Dec 14, 2023

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் இன்று அரையாண்டு தேர்வு என்பதால் பள்ளி கட்டிடம் முன்பு உள்ள பூவாகை மரத்தின் முன்பு பயின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று காரணமாக அந்த மரம் முறிந்து விழுந்தது. இதில் கீழே அமர்ந்து பயின்ற 12 மாணவிகள் 5 மாணவர்கள் என 17 பேருக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. பின் அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். போதிய கட்டட வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.