• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆம்னி பேருந்து கவிழ்ந்து 16 பேர் காயம்..,

ByS.Ariyanayagam

Dec 16, 2025

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அதிகாலை ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்து – இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண்கள் உட்பட 16 பேர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விட்டல்நாயக்கன்பட்டி அருகே அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் பெங்களூரில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண்கள் உட்பட 16 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.