• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வு 1,596 பேர் தேர்வெழுதினர்..,

ByAnandakumar

May 4, 2025

கரூர் மாவட்டத்தில் தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் 2 தேர்வு மையங்கள், வெள்ளியணை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு தேர்வு மையம், கரூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு தேர்வு மையம் என மொத்தம் 4 மையங்களில் நீட் தேர்வு இன்று நடைபெற்றது.

ஆவணங்களை சரிபார்த்து போலீசார் சோதனைக்கு பிறகு மாணவ மாணவிகளை தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தனர். மதியம் 1:30 மணிக்கு தேர்வு மைய கதவுகள் அடைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு தேர்வுகள் நிறைவு பெற்றது. தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் மாவட்டம் முழுவதும் மாணவர்கள் 524 மாணவிகள் 1072 பேர் என மொத்தம் 1596 கலந்து கொண்டு நீட் தேர்வினை எழுத உள்ளனர்.‌

11 மணிக்கு மாணவர்கள் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ர்கள் தற்போது மாணவ மாணவிகள் வந்து இதில் 42 வயது மதிக்கத்தக்க கரூர் மாவட்டத்தைச் சார்ந்த மென்பொறியாளராக பணிபுரிந்து வரும் நிலையில் நீட் தேர்வு எழுத கிருஷ்ணகுமார் என்பவர் வந்திருந்தார்.