• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மும்பையில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Byகுமார்

Sep 24, 2021

மும்பைக்கருகில் உள்ள டோம்பிவலியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை, அவருக்குத் தெரிந்த நபர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் சிறார் வதைக்கு உள்ளாக்கியுள்ளார்.

அதனை தனது மொபைலில் பதிவு செய்து கொண்ட அவர் தொடர்ந்து, அந்த நபர் அச்சிறுமியிடம் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, தன் நண்பர்களுடன் அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு சிறார் வதைக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

மொத்தம் 29 பேர் இந்தக் கொடிய செயலில் ஈடுபட்டனர். அவர்களது தொடர் தொல்லை காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமி, புதன்கிழமை இரவு மான்பாடா போலீஸ் நிலையத்தில் குற்றவாளிகளுக்கு எதிராகப் புகார் செய்தார்.

உடனே விரைந்து செயல்பட்ட போலீஸார் இதில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்தனர். மற்றவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.