• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

ஊழியர்களுக்கான 12வது பட்டமளிப்பு விழா..,

BySeenu

Mar 17, 2026

கோவை தெக்கலூர் KPR மில் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராமசாமி தலைமை தாங்கி பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 618 பெண் ஊழியர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், “ஒரு காலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் வளர்ச்சி அடையாது என்று கூறப்பட்டாலும் இன்று அந்த நிலை மாறிவிட்டது என்றும் நாட்டில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதிகரிக்க வேண்டும். நாம் இறக்குமதி செய்யும் பல பொருட்களை நாமே தயாரித்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்,” என்றார்.

மேலும் பெண்கள் வாழ்க்கையில் வரும் சவால்களை தைரியமாக எதிர்கொண்டு சாதிக்க வேண்டும் என்றும், குடும்பத்தினரின் நம்பிக்கையை மதித்து முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் கல்வி மையம் சார்பில் பணியாற்றிக் கொண்டே உயர் கல்வி பயின்று பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.