மலர் கண்காட்சியை முதல் நாளில் -14005 பேரும் இரண்டாம் நாள் ஆன நேற்று – 16580 பேரும் என இரண்டு நாளில் 30585 பேரும் மலர்கள் காட்சியை கண்டு ரசித்து உள்ளனர் தோட்டக்கலைத் துறை தகவல்…
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை சுற்றுலாத்துறை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு கோத்தகிரி நேரு பூங்காவில் 13வது காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது.
இந்நிலையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான 127 வது மலர்கள் கண்காட்சியில் வண்ணமலர்கள் கொண்ட பண்டைய தமிழ் அரசர்களின் வாழ்வியல் முறைகளை வெளிக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பண்டைய அரசர் கால அரண்மனைகள், பண்டைய கால சிம்மாசனம் ,ஊஞ்சல், கண்ணாடி, இசைக்கருவிகள், யானை, புலி, போன்ற அலங்கார வடிவமைப்புகளை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இடம் பெற்றுள்ளது
இதில் முதல் நாளான 15-05-2025-14005 பேரும் இரண்டாம் நாளான நேற்று 16.05.2025–16580 பேரும் என இரண்டு நாளில் 30585 சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர்.
மேலும் வர விடுமுறை நாளான இன்றும் நாளையும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.