• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

12 ஆண்டுகளுக்கு பின் இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியது

ByA.Tamilselvan

Mar 12, 2023

கடந்த 2010ம் ஆண்டு வெடித்த மெராபி எரிமலை நேற்று நள்ளிரவு வெடித்துச் சிதறியது அப்பகுதி மக்கள் வெளியேற்றம்.
இந்தோனேசியாவில் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இங்கு யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் 2,968 மீட்டர் (9,721 அடி) உயரமுள்ள மெராபி எரிமலை நள்ளிரவு வெடித்துச் சிதறியது. அதிலிருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு பரவும் எனவும், தீக்குழம்பும் வெளியேறி, சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு வழிந்தோடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து வெளிவரும் சாம்பல் அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த எரிமலை கடந்த 2010ம் ஆண்டு வெடித்த போது 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர் .