மகளிர் உரிமைத்தொகை வருடத்திற்கு 12 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது என தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேசினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட குருவித்துறை முள்ளிப்பள்ளம் தென்கரை மேலக்கால் திருவேடகம் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தங்க தமிழ்ச்செல்வன் எம் பி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முள்ளிப் பள்ளம் கிராமத்தில் பேசுகையில் தமிழக முதல்வர் தளபதியின் பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகம் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இதே போல் மகளிர் உரிமைத் தொகை வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் கோடி வழங்கப்படுகிறது. ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு பெண்களுக்கும் வீடு தேடி வருகிறது. இந்தத் தொகையானது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தளபதியார் மீண்டும் தமிழகத்தின் முதல்வராகிய பின் கூடுதலாக வழங்குவார். இதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையால் வருகின்ற அனைத்து தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், திருவேடகம் சிபிஆர் சரவணன், வாடிப்பட்டி பிரகாஷ், முள்ளிப்பள்ளம் கிளைச் செயலாளர் கேபிள் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன் மற்றும் அந்தந்த பகுதி திமுகவினர் கலந்து கொண்டனர்.
