விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதை தொடர்ந்து அதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் காவல்துறை பல முயற்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஷீனா பிபி உத்தரவின் பதில் கஞ்சா மற்றும் குட்கா கோயில்களை தடை செய்யும் விதத்தில் சார்பு ஆய்வாளர் முருகன் தலைமையிலான சிறப்பு சார்பு ஆய்வாளர் வெள்ளத்துரை தலைமை காவலர்கள் முத்துக்குமார் தங்கேஸ்வரன் ஆகிய போலீசார் நகரில் பல்வேறு பகுதிகளில் சீருடை இல்லாமல் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் தனிப்படை போலீசார் கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரை அருகில் இருந்து இராஜபாளையம் பககுதியில் கஞ்சா வருவதை அறிந்த போலீசார் தீவிரமாக தேடுதல் பணி ஈடுபட்டனர்.

விசாரணையில் இராஜபாளையம் செவல்பட்டி தெருவை சேர்ந்த நயினார் மகன் சர்க்கரை வயது 39 என்பது தெரிய வந்தது. இவரிடம் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் வளர்மதி சிறப்பு சார்பு ஆய்வாளர் சுந்தரம் மகாலிங்கம் ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தனர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.





