• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருப்பதி கோவிலில் 12 மணிநேரம் நடை அடைப்பு

ByA.Tamilselvan

Oct 12, 2022

சூரியகிரகணம் ,சந்திரகிரகணம் வருவதை அடுத்து திருப்பதி கோயிலில் 12 மணி நேரம் நடை அடைப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 25-ந்தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் பிற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு திருமலைக்கு திட்டமிட்டு வரவேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.