மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 114 வது ஆண்டு விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் தலைமை வகித்தார்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலெக்ஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார். முள்ளி பள்ளம் கிராம தலைவரும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான கேபிள் ராஜா பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். தலைமை ஆசிரியர் காந்தாமணி வரவேற்றார். முன்னாள் மாணவர் கிரீன் லீப் பவுண்டேஷன் பழனி குமார், நவ்ஷாத் பவுண்டேஷன் உமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







