• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 618 வது கிளை திறப்பு விழா..,

ByKalamegam Viswanathan

Feb 28, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகே தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 618 வது கிளை திறப்பு விழா நடைபெற்றது மதுரை மண்டல தலைவர் ஜெபானந்த் ஜூலியஸ் தலைமை வகித்தார்.

சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் துவக்கி வைத்தார். கிளை மேலாளர் கார்த்தி வரவேற்றார். இதில் எம் கே முருகேசன், பெட்ரோல் பங்க் சுரேஷ் பாண்டியன் வழக்கறிஞர் அபிராமி சந்தோஷ், விக்டர் கயர் ஃபேக்டரி மற்றும் சோழவந்தான் நகை அடகு கடை உரிமையாளர்கள் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் தொழிலதிபர்கள் வர்த்தகர்கள் விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.