• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக திருச்சியில் இருந்து 11 கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர்

Byகதிரவன்

Apr 2, 2024

தேர்தல் பாதுகாப்பு பணிக்காத துணை ராணுவ படையினர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வந்தனர் . திருச்சியில் இருந்து 8 மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு உடமைகளை எடுத்துச் சென்றனர்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் முறைகேடுகள் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காகவும் அவற்றை கண்காணிப்பதற்காகவும் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் 8 கம்பெனி துணை ராணுவ படையினர் ரயில் மூலம் திருச்சி வந்தனர்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்த துணை ராணுவ படையினரை தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி தளவாய் ராஜசேகரன் தலைமையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி துணை தளவாய் கிரிஜா ஆகியோர் பூங்கோத்து கொடுத்து வரவேற்றனர்.

ஒரு கம்பெனியில் 90 பேர் வீதம் 8 கம்பெனி துனை ராணுவ படையினர் திருச்சி வந்தனர். திருச்சியில் இருந்து அவர்கள் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கரூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக செல்கின்றனர். 8 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் 11 கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.