• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மே 19ல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!

Byவிஷா

May 16, 2023

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19 ஆம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி (10ஆம் வகுப்பு) பொதுத் தேர்வு நடந்தது. இத்தேர்வை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்.5-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 7.88 லட்சம் பேர் எழுதினர்.
நேற்று அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம் வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
”சென்னையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் மே 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்.
www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவு எண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டுத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையம், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறியலாம்.
மாணவர்கள், தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது அளித்த கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் “ என அறிவிக்கப்பட்டுள்ளது.