மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில், இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

நெகிழிப்பைகளால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க இயற்கை வளங்களை பாதுகாக்க சணல் பைகளில் ஓவியங்கள் வரையும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
பிளாஸ்டிக்குக்கு நோ சொல்லுங்கள் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வானது, பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மனித சமுதாயத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் விதமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது.

ஆசிரியர் பயிற்ச்சி கல்லூரி முதல்வர் டாக்டர் டி.தேன்மொழி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நோபல் உலக சாதனை நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஹேமலதா அதிகாரப்பூர்வ நடுவராகக் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை ஆய்வு செய்தார்.
இந்தச் சாதனை முயற்சியில், கல்லூரி மாணவ-ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சணல் நார்களைக் கொண்ட பைகளில் இயற்கையை வளப்படுத்தும் கலை வடிவங்களையும், பிளாஸ்டிக் ஒழிப்புச் செய்திகளையும் நேர்த்தியாக உருவாக்கியிருந்தனர்.
இயற்கை இழையான சணலைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலை எவ்வாறு காக்க முடியும் என்பதை இக்கலைப்படைப்புகள் பறைசாற்றின.






