• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தமிழக சட்டப்பேரவையில் செப் : 6 காவலர் நாள் உள்பட 102 அறிவிப்புகள்

Byவிஷா

Apr 29, 2025

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் செப்டம்பர் 6ல் காவலர் நாள் உள்பட 102 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி அன்று தொடங்கியது. அன்றைய தினம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை காலை 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் இடம்பெற்றன. இதையடுத்து மார்ச் 15ந்தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் பட்ஜெட்டை எத்தனை நாட்கள் கூட்டுவது என்பது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூடி, பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பட்ஜெட்டுகள் மீதான விவாதங்கள் நடைபெற்று முடிந்ததும், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு மாதமாக துறை வாரியான மானிய கோரிக்கை விவாதங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. நேற்று (ஏப். 28) காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். மேலும் அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக இன்றும் முதலமைச்சர் காவல்துறை மானிய கோரிக்கையில் பதிலுரை ஆற்றி வருகிறார்.

இன்றைய அறிவிப்பின்போது, ஆண்டுதோறும் செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழக காவலர் நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்துறை சார்பில் 102 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் ”சட்டம் – ஒழுங்கை பாதுகாத்து இரவுபகலாக வேலை செய்யும் காவல்துறையினருக்கான தனி நாளை அறிவிக்க விரும்புகிறேன். 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் காவலர் நாள் கொண்டாடப்படும். இந்த நாளில் கடமை, கண்ணியத்தை பின்பற்றி செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை கண்காட்சிகள் நடத்தப்படும். ரத்த தான முகாம்கள் நடத்தப்படும்.” என்றார்.

குற்ற சம்பவங்களில் தமிழ்நாடு பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி இருப்பது உறுதி செய்யப்படும்.

காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும். ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்.

2026ல் திராவிட மாடல் அரசு 2.0

2026ல் திராவிட மாடல் அரசு 2.0 வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட் ஒன் தான்; தமிழ்நாட்டுக்காக, தமிழர்களுக்காக எனது பயணம் தொடரும். திட்டங்கள் எல்லாம் ஸ்டாலின் பெயரை அல்ல திராவிட மாடல் பெயரை கூறும்.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை விட 1000 மடங்கு சிறப்பான சாதனைகளை செய்துள்ளோம். தமிழ்நாட்டை ஒருபோதும் சூறையாட முடியாது என்று கூறினார்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்.

சென்னை ஆயுதப்படையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.

உதகையில் ஆயுதப்படை குடியிருப்புகள் கட்டப்படும்.

250 காவல் ஆய்வாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

350 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும்

உதகை, தருமபுரியில் ரூ.101 கோடியில் ஆயுப்படை காவல் குடியிருப்பு கட்டப்படும்.

50 நடமாடும் தடயவியல் வாகனம் வழங்கப்படும்.

ழூரூ.16 கோடியில் 7 இடங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்து 102 அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நீலகிரி, தருமபுரியில் ஆயுதப் படை காவலர்கள் குடியிருப்புகள் கட்டப்படும்,

காவல்துறைக்கு 350 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும்,

50 தடயவியல் நடமாடும் வாகனங்கள் வாங்கப்படும்

7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர் உறுதி

இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கலைஞர் கூறுவார். கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் ‘சாதனை சாதனை சாதனை’ என கூறியிருப்பார். கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

அதிமுக ஆட்சியில் நிர்வாக கட்டமைப்பு கட்டாந்தரையில் ஊர்ந்தது

அதிமுக ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக சீர்கேடு காரணமாக நிர்வாக கட்டமைப்பு கட்டாந்தரையில் ஊர்ந்தது. தரைமட்டமாக இருந்த நிர்வாக கட்டமைப்பை திமுக தலைநிமிரச் செய்துள்ளது.

9.6 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு

2024-2025ல் இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது. 2024-25ல் இந்தியாவின் வளர்ச்சி 6.5சதவீதம்தான்.தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைந்துள்ளது. இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பாதியளவு தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

98.3சதவீதம் பள்ளிகளில் ஆய்வக வசதிகள் உள்ளது

98.3 சதவீதம் பள்ளிகளில் ஆய்வக வசதிகள் உள்ளது. கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை.

சிறந்த 25 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன

சிறந்த 100 பல்கலைக்கழகத்தில் 25 தமிழகத்தில் தான் உள்ளது.

1.43 விழுக்காடு மக்களே வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர்

இந்தியாவில் 11.2 சதவீதம் வருமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4 சதவீதம் பேர் மட்டுமே வருமைன்கோட்டிற்கு கீழ் உள்ளனர். தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம்.
“மேலே பாம்பு கீழே நரிகள் குரித்தால் அழகி ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் ஒன்றிய அரசு மறு பக்கம் ஆளுநர் நிதி என்று எல்லா தடைகளை தாண்டி செய்த சாதனை படைத்து வருகிறோம். இது தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை.
இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவர்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். இந்தியாவிலேயே அதிகமாக மருத்துவ படிப்பு இடங்களில் தமிழ்நாட்டில்தான் உள்ளன.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
காற்றாலை உற்பத்தியில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. 27.75 லட்சம் பேர் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். ரூ.5.35 லட்சம் முதலீடுகள் பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடம்.
தமிழ்நாட்டில்தான் காவல்துறையில் பெண் அதிகாரிகள் எண்ணிக்கை அதிகம். பல்வேறு துறைகளில் இறுதி இடத்தில் இருந்த தமிழ்நாடு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
திராவிட மாடல் அரசு என்று நான் குறிப்பிட்டேன், ஒரு தத்துவத்தின் ஆட்சியின் அடையாளமாகத்தான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறினேன். சுயமரியாதை சமூக நீதி, சமத்துவம், அதிக அதிகாரம் கொண்ட மாநிலம் இதற்காகத்தான் உழைக்கிறோம். காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஆட்சி என கூறுவது உண்டு.
யார் சிறப்பாக செயல்படுவது என்று ஒவ்வொரு துறைக்கு இடையே போட்டி போட்டு செயல்படுகின்றனர்.
தமிழ்நாடு அமைதியான மாநிலம். தமிழ்நாட்டில் அமைதி நிலவ காவல்துறைதான் காரணம். அமைதியான மாநிலத்தில்தான் தொழில் வளரும். காவல்துறைக்கு நன்றி.
கலவரங்களை தூண்டலாம் என்று சிலர் நினைத்தாலும் மக்கள் சிலர் முறியடித்துவிடுகின்றனர். தமிழ்நாட்டில் மதக்கலவரம், ஜாதிச் சண்டைகள் இல்லை. சட்டம் ஒழுங்கு கெட்டுவிடாதா என்று துடிப்பவர்களின் ஆசையில் மண் தான் விழுந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசுவோருக்கு சொல்கிறேன், இது காஷ்மீரோ மணிப்பூரோ அல்ல. உத்தரப்பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கு நடக்கவில்லை.
சைபர் உள்பட அனைத்து வகையான குற்றங்களையும் கட்டுப்படுத்தியுள்ளோம். பொதுமக்கள் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரது கூட்டுப்பொறுப்பு. ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்தால் காவல்துறையிடம் தெரிவியுங்கள். ஓய்வு இன்றி பணியாற்றும் காவல்துறையினரிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். தனிப்பட்ட வெறுப்பை காவல்துறையினர் மக்களிடம் காட்டக்கூடாது.

இவ்வாறு ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.