கோடம்பாக்கத்தில் நடந்த ‘மெகா கிளீனிங்’ முகாமில், 100 கிலோ குப்பை அகற்றப்பட்டது.
இந்திய விழிப்புணர்வு இயக்கம் கோடம்பாக்கம், எக்ஸ்னோரா மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து, கோடம்பாக்கத்தில் நேற்று, ‘மெகா கிளீனிங்’முகாமை நடத்தினர். இந்நிகழ்வில், கோடம்பாக்கம் அசீஸ் நகர் தெருக்களில், மழை வெள்ளத்தில் தேங்கிய குப்பையை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் என, 200 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதன் வாயிலாக, 100 கிலோ குப்பை அகற்றப்பட்டது. மேலும், சாய்ந்து கிடந்த மரக்கிளைகளையும் வெட்டி அகற்றினர். அசீஸ் நகரின் ஒரு பகுதியில் குவிக்கப்பட்ட குப்பை மற்றும் சேறு, சகதி ஆகியவற்றை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.











; ?>)
; ?>)
; ?>)