


வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி மதுரை ஆரப்பாளையம் சந்திப்பில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் அதன் நிறுவனர் திருமாறன் ஜி ஆணைக்கிணங்க மதுரை மேற்கு மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீராம் மாநில துணைத் தலைவர் தங்க விருமண் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் பூவை. ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறக் கோரியும், ஜாதிவாரியாக கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து மதுரை கரிமேடு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

